அக்குள் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்…!
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் இருக்கும் அமிலத்தன்மை ப்ளீச்சிங் ஏஜென்டாக இருந்து சருமத்தில் இருக்கும் கருமையை நீக்குகிறது. உருளைக்கிழங்கை சின்னதாக வெட்டி அக்குளில் வைத்துக் கொண்டு தேய்த்து வந்தால் அக்குளின் கருமை நீங்கும்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் உள்ளது. இது கருமையை நீக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சை சாறை கருமையான இடங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து அலச வேண்டும்.
வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காய்க்கு சருமத்தின் நிறத்தை கூட்டக்கூடிய தன்மை உள்ளது. எனவே வெள்ளரிக்காயை அரைத்து அக்குளில் தடவி வந்தால் நல்ல மாற்றம் தரும்.
பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றும். இதனை சருமம் கருமையான இடங்களில் தேய்த்தால் சருமம் ஒளிரும். இந்த பவுடரை தண்ணீரில் கலந்து அக்குளில் தடவி ஊற வைத்து அழுவினால் சருமத்தின் நிறம் கூடும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் தன்மை கொண்டது. அக்குள் கருமை உள்ளவர்கள் குளித்த பிறகு அக்குளில் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால் கருமை நீங்கும்.
