டெல்லி பறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!! தொடரும் ஆளுநர் பதவி..!!
அவசரமாக பயணமாக இன்று டெல்லி செல்லும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி., டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது இருப்பினும் தொடர்ந்து அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். ஆனால், புதிய ஆளுநர் குறித்தோ அல்லது ரவியின் பதவி நீட்டிப்பு குறித்தோ எந்த அதிகாரப்பூர்வ தகவலோ தற்போது வரை குடியரசுத் தலைவர் வெளியிடவில்லை. இந்நிலையில், ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி செல்லவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.. விழாவில் பங்கேற்பதற்காக ராஜ் நாத் சிங் சென்னை வந்துள்ளார்.. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினடம் பேசியதாக சொல்லப்படுகிறது., இதனால் கூட ஆளுநர் ஆர்.என்.ரவியை டெல்லிக்கு அழைத்து இருக்கலாம் என மற்றொரு அரசியல் பேச்சும் பேசப்பட்டு வருகிறது..
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் 2 ஆண்டுகள், தமிழகத்தில் 3 ஆண்டுகள் என ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 31ம் தேதி அவரின் பதவிக்காலம் முடிந்த பின்னும் மீண்டும் ஆளுநராக தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பாக டெல்லி வட்டாரம் கூறுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 156 பிரிவின் படி ஆளுநரின் பதவி காலம் நிறைவடைந்த பிறகும் ஒருவரால் ஆளுநராக பதவியை தொடர முடியுமா என கேள்வி எழுப்பட்டது..
அதற்கு குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது கட்டாயமில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆளுநரை நியமிக்கும் வரை ஆளுநராகவே ரவி தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..