“பாதுகாப்பு இல்லா இந்தியா..” பிரதமர் மோடிக்கு வந்த 71 கடிதம்..!
மருத்துவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டுமென 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இரவு மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள “ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையின் இரவுப் பணியில் ஈடுபட்ட முதுகலை 2ம் ஆண்டு படித்த பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.. பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பிணமாக கண்டெடுக்கப் பட்டுள்ளது..
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும்., அந்த கொடூர செயலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கித்த பெண் மருத்துவரின் பெற்றோர்., இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென உத்தரவிட்டதின் பேரில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இது குறித்து பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது “கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம், பெண்கள், மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உடனடி நடவடிக்கை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்., மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..