தமிழ்நாட்டு செல்ல மருமகள்..! இன்றும் பலரின் மனதில் வாழும் அழகி..! தேவையானி 50..!
தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளின் மத்தியில் அது எல்லாம் தாண்டி திறமையில் நடிப்பவர்கள் நிறையபேர் இருக்கும் இந்த சினிமாஉலகில் 90ஸ்களின் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த நடிகைதான் “தேவயானி” கன்னடத்து பைங்கிளி அங்கிருந்து தமிழ் சினிமாவிற்கு பறந்து வந்த தேவயானி தமிழ் மொழிகளில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர்.
இவருடைய நிஜப்பெயர் “சுஷ்மா” சினிமாவின் பக்கம் வந்தால் “தேவயானி” என மாற்றி கொண்டார். திரைப்படங்கள் மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்.
இப்படி இருக்கும் இவரது வாழ்க்கையில் காதல் மலர தொடங்கியது. இயக்குனர் ராஜ்குமாருடன் காதலில் பழக தொடங்கினர் தேவயானி. ஆனால் தேவயானியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க நண்பர்களுடன் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கணவர் ராஜ்குமார் நம்மளுக்கு குழந்தைகள் வேண்டாம் என்று கூறினார். அழகா இல்லை என்றால் மற்றவர்கள் குறை சொல்லுவார்கள் என்று கூறினார் ராஜ்குமார். அதற்கு தேவயானி அழகு என்பது தோற்றத்தில் இல்லை மனசில் இருக்கிறது. என்று கூறி இப்பொழுது இருவருக்கும் இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறது..
தன்னுடைய அழகினாலும் திறமையினாலும் இன்றுவரை திரையில் பயணித்து கொண்டு இருக்கும் நடிகை “தேவயானி” இன்னும் சொல்லபோனால் யாராலும் கிசுகிசுக்க படாத நடிகை என்றும் சொல்லலாம் சிறந்த ஒழுக்கமான உடைகளை மட்டும் அணிந்து இன்று வரை நடிப்பவர் இவர் மட்டும்.
தமிழ் சினிமாவில் எல்லா முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் தேவயானி. யாராலும் மறக்கவே முடியாத படம் என்றால் அது சூரியவம்தான் என்று சொல்லலாம் இன்றுவரை அந்த படம் பலமுறை போட்டாலும் சலிக்காமல் பார்ப்பவர்கள் ஏராளம் என்று சொல்லலாம் நானும் ஒரு ரசிகைதான்.
இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றார். காதல் கோட்டை திரைப்படம் மற்றும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம் என்று சொல்லலாம் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் என்று சொல்லுவார்கள்.
அதைபோல் தான் இந்த திரைப்படத்தில் கமலியும் ,சூர்யாவும் பறக்காமலே காதலிப்பார்கள் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் படம் என்றே சொல்லலாம். இந்த கமலி கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட சிறப்பு விருதும் பெற்றவர் தேவயானி..
இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் “தேவயானி” அவர்களுக்கு மதிமுகம் குடும்பத்தினர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
– லோகேஸ்வரி.வெ