சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் பிரபல ஊடகத்தில் வெளியானது அதனை தொடர்ந்து ஒன்றிய அரசு அதற்கு விளக்கமளித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்றால் உலகமே கடுமையான சூழலில் தவித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவலின் தீவிரம் சற்று குறைந்தது. இதனால் உலக நாடுகள் ஊரடங்கு தளர்வுகளை தகர்த்தி உலக நாடுகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரும் நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகையான பி எப் 7 வேரியண்ட் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் மீண்டும் கோரோனா பரவலை கண்டு அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், இந்தியாவிலும் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
இருப்பினும் இந்தியாவிலும் அந்த வகை வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால் இந்தியாவில் ஊரடங்கு அம்பலப்படுத்த பட வாய்ப்புள்ளதாக பரவலாக பேசபட்டு வந்த நிலையில், பிரபல இந்தி செய்தி நிறுவனம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடபடவுள்ளதாக செய்தி வெளியிட்டது. இதற்கு ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது, அதில், இந்த செய்தியை வதந்தி என கூறியுள்ளது. இது அதிகாரப்பூர்வ செய்தி அல்ல என்றும், இதுபோன்ற செய்தியை வெளியிடும்முன் தகவலை சரிபார்க்க வேண்டும் என்று தனது அதிகார்வபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
Discussion about this post