நடக்கவிருக்கும் ஹாக்கி உலகக்கோப்பையில் இந்தியா அணி வென்றால் ஒரு ஒரு வீரருக்கும் ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கபடும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இந்திய நாட்டில் கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு அவ்வளவு வரவேற்பு கிடைப்பதில்லை என்ற ஏக்கம் அனைவரிடமும் உள்ளது. அதனால் கால்பந்து, கபடி, ஹாக்கி, உள்ளிட்ட போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டின் உலக கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஹாக்கி உலக கோப்பை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஓடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசு ஒன்றை அறிவித்துள்ளார்.
பீர்ஸா முண்டா சர்வதேச ஸ்டேடியம் வளாகத்தில் அதி நவீன வசதிகளுடன் உலக கோப்பி கிராமத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய முதல்வர், ஹாகிய உலக கோப்பையில் இந்தியா அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றினால் ஒரு ஒரு வீரர்களுக்கும் தலா ஒரு கோடி அளிக்கப்படும் என்று அந்த விழாவில் அறிவித்தார்.இதனால் வீரர்கள் உற்சாகமடைந்த உலக கோப்பையில் நன்றாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post