ADVERTISEMENT
நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாக வைகோ பேச்சு…
நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அலட்சியப் போக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடத்திற்க்கு அத்துமீறி நுழைந்த இரு இளைஞர்கள் புகைக் குப்பிகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியே இருந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றுமொரு அதிர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நான்கு கட்ட பாதுகாப்பு சோதனைகளையும் மீறி நாடாளுமன்றத்தில் நடந்துள்ள நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள வைகோ, ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட அலட்சியப் போக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.