தீயணைப்பு துறையின் ஊர்திகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 63.30 கோடி ரூபாய் மதிப்பிலான ஊர்திகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட 3 ஊர்திகள், 7 அதி உயர் அழுத்த நீர் தாங்கி வண்டிகள், 20 வாட்டர் பவுசர் வாகனங்கள், 25 புதிய நீர்தாங்கி உள்ளிட்ட புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், தீயணைப்புத் துறை மாவட்ட அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு 16 ஜீப்கள், பேரிடர் காலங்களில் ஆட்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் 2 ஊர்திகள் ஆகியவற்றையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.