ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.
ஜிம்பாப்வே முன்னாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 49. பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மே மாதம் ஹீத் ஸ்ட்ரீக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளைச்சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகிறார்கள்.