நாக்பூரில் சூழ்ந்த வெள்ளம்..தொடர் கனமழையால் தவிக்கும் நாக்பூர் மக்கள்..!!
அம்பாஜாரி ஏரி உடைந்ததால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.., வீட்டிற்குள் இடுப்பளவிற்கு தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்..
வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த 6 பேரை பேரிடர் குழு மீட்டுள்ளனர்.. ராம்தாஸ்பேத் கால்வாய் சாலை தற்போது வெள்ளகாடக காட்சி அளித்து வருகிறது..
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.., உண்ண உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு முகாம் கூட இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பது இன்னும் சோகத்தை கொடுக்கிறது..
இன்னும் எத்தனை பேர் இதில் பாதிக்கப்படுள்ளனர் என மீட்பு பணியினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்…
Discussion about this post