வெளுத்து வாங்க போகும் கனமழை..!! சில மாவட்டங்களுக்கு மட்டும் எச்சரிக்கை..!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட்ட அணைத்து பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
கோயம்புத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள மலை பகுதிகளான, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது
மேலும் செப்டம்பர் 25ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
செப்டம்பர் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இலங்கை கடலோர பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டு கொண்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..