வேர்க்கடலை ஃபிரான் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
இறால்கள் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 5 முதல் 6
வேர்க்கடலை – 50 கிராம்
முந்திரி – 7
பிரிஞ்சி இலைகள் – 2
கிராம்பு – 2
இலவங்கப்பட்டை – 1
ஏலக்காய் – 2
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் வேர்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு பின் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதில் முந்திரியை சேர்த்து வதக்கி பின் உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- இறால் வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
- பின் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
