சத்தான ப்ரோக்கோலி சூப்..!
ப்ரோக்கோலி
வெண்ணெய் 1 ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
பூண்டு 12 பற்கள்
உருளைக்கிழங்கு 1 நறுக்கியது
தண்ணீர் 2 கப்
உப்பு தேவையானது
மிளகு தேவையானது
ப்ரோக்கோலியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் வெண்ணெய் ஊற்றி வெங்காயம்.பூண்டு போட்டு வதக்கி உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி துண்டுகள்,உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஆற விட்டு அதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதனை ஒரு வாணலில் மாற்றி சிறிது கொதிக்க வைக்கவும். உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளவும். சூப் கெட்டியாக இருந்தால் கூட தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் ப்ரோக்கோலி சூப் தயார்.
