நாங்க போகாத ஏரியாவே இல்லை..! பாஸ்போர்ட் இல்லை..! டிக்கெட் இல்லை.. ஆனாலும்..!
இந்தியவாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கும் “சென்னை விமான நிலையம்” நேற்று ஒரே நாளில் பரபரப்பாகியுள்ளது.
இந்தியவாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகவும், தென் இந்தியாவில் பிராதன நிலையங்களின் தலைநகராக இருப்பது சென்னை விமான நிலையம். இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இங்கிருந்து நூற்றுக்கணக்கான விமானங்கள் தினமும் இயக்கப்படுகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த சென்னை விமான நிலையம் தற்போது பயணிகளின் பாதுகாப்பிற்கு கேள்விகுறியாகி உள்ளது.. இதனால் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையிலிருந்து திடீரென கண்ணாடிகள் உடைந்து பயணிகள் தலையில் விழுந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட முறை மேற்கூரைகள் உடைந்து விழுந்ததால் அதனை பயணிகள் ஒரு பொருட்டாகவே கருத முடியாத நிலை நீட்டிதுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு நாய்கள் சுற்றி வளைந்துள்ளது.. இதனால் பயணிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களாகவே சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
விமானநிலையத்தின் எண்ட்ரென்ஸ் பகுதிகளிலும், காத்திருப்பு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான நாய்கள் குவிந்துள்ளது. இதனால் உள்நாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் நாய்கள் தொல்லை அதிகரித்தது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பெயரில் மாநகராட்சி மூலம் அந்த நாய்கள் பிடிக்கப்பட்டது.
இந்நிலையில் திடீரென சென்னை விமான நிலையத்தில் மீண்டும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று இரவு நுழைவாயில் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சண்டை போட்டு குறைத்தவாறு அங்கும் இங்கும் ஓடியது. இதனால் பயணிகள் கடும் அச்சமடைந்தனர். இன்னும் சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே சென்னையில் பல்வேறு இடங்களில் மாடுகள் மற்றும் நாய்கள் தாக்கி பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில். தற்போது விமான நிலையத்திலும் நாய்கள் தொல்லை அதிகரித்து இருப்பது மக்களையும் பயணிகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
மேலும், விமானநிலையத்திற்குள், அத்தனை பாதுகாப்புகளை மீறி நாய் உள்ளே எப்படி வந்தது எனவும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..