பொதுக்கழிப்பிடத்தைப் பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்த இரண்டு பேர் மீது மாநகராட்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலத்தில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் பொதுக்களிடையே கட்டணம் வசூலித்த இரண்டு நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.