தமிழகத்தில் ஆன்லைன் மூலம் விளையாடப்படும் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து இளைஞர்கள் பலர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்தவண்ணம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூதாட்டம் தொடர்பான விளையாட்டுகளின் தடை குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆக.27 -ல் ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் முதல் அமைச்சரின் தனிச்செயலர் உதயசந்திரன், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி ஆகியோர் பங்கேற்றனர்.