திங்கட்கிழமை விரதம் – சிவன் தரும் வரம்..!!
கடவுள் சிவனுக்கென்று பக்தர்கள் கூட்டம், வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தை விட, என்ன முடியாத அளவிற்கு இருக்கும்.
அவருக்கென்று விரதம் இருந்து வழிபாடு செய்யும் பக்தர்கள் ஏராளமானோர்.
ஆனால் ஒரு சிலருக்கு அந்த விரதத்தின் மகத்துவம் பற்றி தெரியாது. ஆனால் இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய இறைவன் வழிபாட்டில் நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது.
சிவனுக்கு சோம வாரம் விரதம் இருந்தால், கிடைக்கும் பலன் பற்றி உங்களுக்காக.
வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று, அசைவம் சாப்பிடாமல் இருந்து, சிவனுக்கு சோமவாரம் விரதம் இருந்து வந்தால்,
* எமன் பற்றிய பயம் நீங்கும்.
* இதயம் சம்மந்தப் பட்ட நோய்கள் நீங்கும்.
* தோஷங்கள் நீங்கி விடும்
* மாங்கல்ய வரம் கிடைக்கும்.
மேலும் சிவனுக்கு வில்வம் இல்லையால் அர்ச்சனை செய்தால்,
* ஏழு ஜென்ம பாவங்களும் நீங்கும்.
* 1000 பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
* வில்வத்தால் அர்ச்சனை செய்பவர்களுக்கு, சிவலோகம் செல்வார்கள்.
முக்கியமாக திங்கள் கிழமை அன்று, ஆகாரம் எதுவும் அருந்தாமல் விரதம் இருந்து, சர்வ தோஷ நிவரத்தீஷ்வரரை கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி