இனி மூச்சு விடணும்னா கூட கூகுள் கிட்ட தான் கேட்கணுமா..?
இந்தியாவில் மட்டும் தான் காற்று மாசு மிகபெரிய பிரச்சனையாக இருக்கிறது.., இந்த சமயத்தில் தான் கூகுள் நிறுவனம் ஒரு அட்டகாசமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
தற்போது இந்திய நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காற்று மாசு மிக பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.. டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் காற்று மாசு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிட்டது.
முக்கியமாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து வருவாதல்.., அதன் சூழலும் அதிகரித்துள்ளது. இதை குறைக்க பல நடவடிக்கைகள் எடுத்தாலும் எந்த வித பயனும் இல்லை என சொல்லும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்த காற்று மாசை குறைக்க கூகுள் நிறுவனம் ஒரு புதிய வசதியை கொண்டுள்ளது.., இந்த காற்று மாசு இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த புது அமைப்பு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
கூகுள் டிஸ்கவர் தளத்தில் காற்று மாசு பற்றி தெரிந்துக்கொள்வதற்கான புது AQI எனப்படும் காற்று தர மதிப்பீடு குறித்த கார்டை கூகுள் நிறுவனம் வெளியீட உள்ளது.
இந்த செயலில் (APP) மூலம் மக்களால் காற்று மாசு எந்த இடத்தில் அதிகமாக உள்ளது.., எந்த இடத்தில் நாம் சுவாசித்தால் உடலுக்கு தீங்கு விளைவீக்காது என்பதை துல்லியமாக நமக்கு காண்பித்து விடும்.
இந்த வசதி தற்போது ஸ்மார்ட் போன்களில் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.., இதை லேப்டாப் மற்றும் சிஸ்டம் களில் பயன் படுத்த முடியாது.
ஸ்மார்ட் போனில் வரும் ஏர்குவாலிட்டி தகவல்களை காட்டிலும் ஆப்பிள் போனில் அதிகமாக வரும்.. விரைவில் இந்த வசதி அனைத்து செயலிலும் கொண்டு வரப்படும்..
Discussion about this post