மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர…!! எதிர்பார்ப்பில் வைக்கப்பட்டுள்ள ட்விஸ்ட்..!!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகும் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமானது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சில ஆண்டுகள் வரை அமல்படுத்த முடியாத ஒரு சட்டத்தை கொண்டு வருவதால் என்ன பலன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீர் நிரம்பிய பாத்திரத்தில் நிலவின் ஒளி பிரதிபலிப்பது போல, ஒரு மாயை தான் இந்த சட்டம் என விமர்சித்துள்ள ப.சிதம்பரம், தேர்தல் நாடகத்திற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
Discussion about this post