ஒரு குப்பையும் உங்கள் வாழ்க்கையை மாற்றும்..! குட்டி ஸ்டோரி-41
ஒரு பெரிய தொழில் அதிபர் அவருடைய கம்பெனியில் பிரச்சனையா இருக்கு ,இந்த கம்பெனி நமக்கு வேண்டாம் அப்படினு நினைக்கிறாங்க அங்க பணிசெய்கின்ற பணியாளர்களை கவனிக்காமல் கம்பெனியை இழுத்து மூடுறாங்க .அந்த கம்பெனியை முடித்து அருகினில் ஒரு பார்க் பக்கத்தில் உக்காந்து இருக்கிறார்.
அவருக்கு எதிர் பக்கம் குப்பை எல்லாம் கொட்டி இருக்கு, ஒரு வயசான தாத்தா அங்கு வந்தார் அந்த குப்பை தொட்டியில் இருக்கிற காலி பாட்டில், இரும்பு பொருள்களை எல்லாம் கடையில் கொடுத்து காசு வாங்குறாரு.
இன்னொருத்தர் வந்து குப்பை தொட்டியில் இருந்த பேப்பர் பாலிதீன் பை அதை எல்லாம் எடுத்துட்டு போறாரு. இன்னும் கொஞ்சம் நேரம் கழிந்தது ஒரு பசு மாடு வந்து இலை ,தழை எல்லாம் சாப்பிட்டு சென்றது.
இதை பார்த்த தொழில் அதிபர் ஒரு குப்பை தொட்டியின் வாயிலாக இதனை பலன்கள் கொடுக்க முடிகிறது என்னால் ஏன் முடியாது.
நானும் நல்ல மிகப்பெரிய தொழில் அதிபர் ஆக போகிறேன் அதற்காக நான் தினமும் உழைத்து பாடுபடுவேன் என்று நம்பிக்கையுடன் வீட்டிற்கு சென்றான்.
மறுநாள் அவன் திட்டம் தீட்டுகிறான் எப்படி எல்லாம் உழைத்து முன்னேற வேண்டும் என்று நீங்களும் நல்ல முடிவுகளை மட்டும் எடுத்த்து உங்கள் வாழ்க்கைளிலும் முன்னேறி செல்லுங்கள் உங்கள் வழியில் இருக்கும் தடைகள் அனைத்தும் முறியடித்து வெற்றியின் பயணமாக மாறிடும் .
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..