“சாராயத்தில் ஏது போத, அந்த புள்ள பாத்தா”.. பிந்து மாதவி 38..!
ஆந்திரா மாநிலத்தில் பிறந்த இந்த நடிகை தமிழ் சினிமாவிற்கு வந்த கதையை பார்ப்போமா..? முதலில் தெலுங்கு படங்களில் நடித்த நடிகை பின்பு சன் தொலைக்காட்சி தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த இந்த நடிகை சினிமாவிற்குள் நுழைந்தார்.
எத்தனையோ நல்ல படங்களில் நடித்திருந்தாலும் இவங்களுக்கு என்று ஒரு அடையாளம் இல்லாமல் போனது சினிமாவில், பின்பு சத்தம் கூட இல்லாமல் இருந்த நடிகை, பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் கொஞ்சம் பேமஸ் ஆக ஆரம்பித்தார்.
தேசிங்கு ராஜ படத்தில் கொஞ்சம் பேமஸ் ஆனா பிந்து மாதவி, கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தில் திமிரு பிடித்த பொன்னாக நடித்து நல்ல வரவேற்பு கிடைச்சாலும் ஏன் இவங்க நல்ல நிலைத்து நிற்க முடியல என்று தெரியவில்லை.
எத்தனை நல்ல படங்களிலும் நடித்திருந்தாலும், சில நடிகைகள் காணாமல் போய்விடுகிறாள்கள் அந்த வகையில் இந்த நடிகையும் ஒருவர். இன்று பிறந்தநாள் காணும் பிந்து மாதவிக்கு மதிமுகம் தொலைக்காட்சியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நான் வாழும் நாட்கள் முழுவதும் உன்னை பார்த்து கொண்டு வாழவேண்டும், உயிர் போகும் நேரம் வந்தாலும் உன்னுடைய மடியில் சாய்ந்து சாகனும் இதைவிட எனக்கு வேற ஒன்னும் தேவை இல்லை, இந்த பாடலை இசையமைப்பாளர் “யுவன் ஷங்கர் ராஜா” இசையில் பாடகி “பிரியா ஹிமேஷ்” பாடிய பாடல் இது.
காலம் யாவும் நாளும்
உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன்
மடியில் சாய்ந்தே சாகனும்…….
சாராயத்தில் இல்லாத போதை கூட நீ பார்க்கும் பார்வையில் இருக்கிறது, அந்த பார்வையிலயே நான் மாறிவிடுகிறேன்,இசையமைப்பாளர் “யுவன் சங்கர் ராஜா” இசையில் பாடகர் “வேல்முருகன்” பாடிய பாடல்.
சாராயத்தில்
ஏது போத அந்த புள்ள
பாத்தா சட்டுனு தான்
மாறும் பாத தான
தன்னானானே…….
-சரஸ்வதி