இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று(மார்ச்.16) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 134 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது.
நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று(மார்ச்.16) மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து, அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 134 ரன்களில் ஆட்டமிழந்து. இதனால், இங்கிலாந்து அணிக்கு 135 ரன்களை இந்திய அணி இலக்காக வைத்துள்ளது.
இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் செய்து வருகிறது.