5000 பேருக்கு வேலைவாய்ப்பு..!! 2666 கோடி முதலீட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்..!
2666 கோடி ரூபாய் முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது., மேலும் இளைஞர்களின் திறன் மேம்படுத்துவதற்கு ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈற்பதற்காக அமெரிக்க அரசு முறை பயணம் சென்றுள்ளார்.. அமெரிக்க சென்ற நாளில் இருந்து ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வருகிறது..
இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது..
2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்..
14 முன்னணி தொழில் நிறுவனங்கள் :
இந்த அமெரிக்க பயணத்தின் மூலம் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில், உள்ள உலகின் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 4350 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது.
மேலும் உலகளவில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் CEOக்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
முன்னதாக தமிழ்நாட்டில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் பேபால், நோக்கியா, மற்றும் மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.., அதன் பின் 400 கோடி ரூபாய் முதலீட்டில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடனும் 200 கோடி ரூபாய் முதலீட்டில் சிகாகோ ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தமும், 2௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் அஷ்யூரன்ட், ஈட்டன் போன்ற முதன்மை நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுதிடப்பட்டுள்ளது..
அதன் பின்னர் 2௦௦௦ கோடி ரூபாய் முதலீட்டில் டிரில்லியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும், அமெரிக்காவின் சிகாகோவில் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும், 500 கோடி ரூபாய் முதலீட்டில் “லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் 100 கோடி விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடனும் 250 கோடி ரூபாய் முதலீட்டில் விஸ்டியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதிடப் பட்டுள்ளது.. இதுவரை 3050 கோடி ரூபாய் வரையிலான ஒப்பந்தங்கள் இதுவரையில் கையெழுத்திடப்பட்டுள்ளது…
அதன் தொடர்ச்சியாக நேற்று சிகாகோவில் உள்ள ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்டோடெஸ்க் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது..
ஜாபில் நிறுவனம் (Jabil Inc.) :
ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களில் ஒன்றான “ஜாபில் நிறுவனம்” எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.. ஜாபில் நிறுவனமானது சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தன்னுடைய நிறுவனங்களை வைத்து எலக்ட்ரானிக் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.,
முன்னனி நிறுவனங்களில் ஒன்றாகவுள்ள ஜாபில் நிறுவனத்தை தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.. 2000 கோடி ரூபாய் முதலீட்டில் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கபடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது ஜாபில் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் மேட் கிரவுலி, முதுநிலை இயக்குநர் . நித்து சின்கா மற்றும் . பி.ஜெ. ஃபேரன்காப் ஆகியோர் உடன் இருந்தனர்.
ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் (Rockwell Automation) :
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகவுள்ள ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனமானது, தொழிற்துறை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான (Industrial Automation and Digital transformation) இந்த நிறுவனமானது அமெரிக்க நாட்டின் விஸ்கான்சின் மில்வாக்கியில் அதன் தலைமை நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது..
ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் :
666 கோடி ரூபாய் முதலீட்டில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மின்னணு உற்பத்தி நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் பிளேக் மோரெட், முதுநிலை துணைத் தலைவர் ராபர்ட் பட்டர்மோர், துணைத் தலைவர் எட்வர்ட் மோர்லான்டு, இயக்குநர் முத்துகுமரன் பிச்சை ஆகியோர் உடன் இருந்தனர்..
ஆட்டோடெஸ்க் நிறுவனம் (Autodesk)
அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான ஆட்டோடெஸ்க் நிறுவனமானது கட்டடக்கலை, பொறியியல், கட்டுமானம். உற்பத்தி, ஊடகம், கல்வி மற்றும் பொழுதுபோக்குத் தொழில்களுக்கான மென்பொருள்களை தயாரித்து அதை விநியோகம் செய்து வருகிறது. இந்த ஆட்டோடெஸ்க் நிறுவனத்தில் மொத்தம் 14,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பதற்காகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் ஸ்டார்ட் அப்கள் நிறுவனம் உள்ளிட்ட தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகளை முன்னெடுத்து செல்வதற்காகவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன் கையெழுதிடப்பட்டது..
இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஜெப் கிண்டர், துணைத் தலைவர் கென் ஃபூ தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர். டி.ஆர்.பி.ராஜா, மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..