ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!
இலங்கை கடற்படையினரிடம் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்து, கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை விரைந்து நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 14 மீனவர்கள் ராமேஸ்வரம் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது.., அங்கு ரோந்து பணியில் சுற்றி திரிந்த இலங்கை கடற்படையினர் IND-TN-08-MM-198, IND-TN-08-MM-28 மற்றும் IND-TN-08-MM-52 பதிவெண்கள் கொண்ட 3 விசைப்படகுகளையும் 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் (7-9-2024 வரை) 350 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை நீதிமன்றமானது தமிழக மீனவர்களுக்கு விதிக்கும் அபராத தொகையும் அதிகமாக விதிப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது., இதுகுறித்து “இலங்கை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்., மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களே தவிர அதை தடுக்க முற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை தமிழக மீனவர்களின் சிறை காலம் நீடித்துக்கொண்டே போகிறது., அப்படி சென்றால் இங்குள்ள அவர்களின் குடும்பத்தின் நிலை என்னவாகும்..?
இது மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்கும் என முந்தைய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளேன். எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்திட வேண்டும். கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை விரைந்து நடத்திட வேண்டும். என முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..