இரவில் சிக்கன் சாப்பிட்டால் ஏற்படும் விளைவு..!! சிக்கன் பிரியர்கள் கவனத்திற்கு..!!
இந்தியாவில் 80சதவிகிதம் பேர் அசைவ சாப்பாட்டு விரும்பியாக உள்ளனர். இப்போது சின்ன குழந்தைகள் கூட சிக்கன் போன்ற உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
சிக்கனில் ப்ரோட்டீன் இருப்பதால் உடம்புக்கும் நல்லதாகும். ஆனால் அந்த சிக்கணை சரியான நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
பெரும்பாலானோர் அசைவ உணவுகளை மதிய வேளையில் உட்கொள்ளுவார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரவு தூக்கம் எவ்வளவு முக்கியமோ, அதை போன்று தூங்குவதற்கு முன்பு சாப்பிடும் இரவு உணவும் முக்கியம்.
இரவு உணவை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. இரவு நேரத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிலும் சிக்கனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் இரவில் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிலும் ஹோட்டல், fast food-ல் சமைத்த அசைவ உணவுகளை விரும்புவதை கட்டுப்படுத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
நாம் அனைவரும் தற்போது நிறைய செய்திகளில் பார்த்திருப்போம், படித்திருப்போம்.
சிக்கன் சாப்பிட்டு உயிரிழந்துவிட்டனர் என்று ஏனெனில் சிக்கன் சாப்பிட்டவுடன் அது ஜிரணமாக அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
இதனால் உடல் உபாதைகள் ஏற்படும், இரவில் உண்ணும் போது தூக்கம் இல்லாமல் போகும்.., மூச்சி பிரச்சனை ஏற்படும்.
பிறகு உயிரிழக்கக்கூடும். இதுமட்டும் இல்லாமல் இன்னும் சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டியது அவசியம் அதை பற்றி பார்க்கலாம் .
* தயிர் நன்மை கொடுத்தாலும், இரவில் எதிர்வினையை உண்டாக்கும். இரவில் தவிர்ப்பது நல்லது.
*பழங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான ஒன்று. பழம் பயனுள்ளதாக இருந்தாலும், அதை பகலில் சாப்பிடுவது நல்லது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் .
* உலர் பழங்களில் அதிகமான கார்போஹைட்ரேட், சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் காலையில் சாப்பிடுவது நன்மை பயக்கும். இரவில் சாப்பிட்டால், வயிற்று நொதிகளால் உடைக்க முடியாமல் . செரிமானக் கோளாறுகள் ஏற்படும்.
* பெரும்பாலும் கொழுப்புசத்து உள்ள உணவுகள் இரவில் உண்பதால், நமது செரிமானத்தையும், தூக்கத்தையும் கெடுக்க செய்கிறது .
ஒரு ஆய்வின் படி , இது போன்ற உணவுகளை இரவில் தவிர்த்து விட்டு , லேசான உணவுகளை உட்கொள்வதே நல்லது என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..