சருமத்திற்கு நன்மை அளிக்கும் முலாம் பழம்…!
முலாம் பழத்தில் அதிக அளவில் நீர்ச்சத்தும், வைட்டமின் மற்றும் நார்ச்சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளதால் உடலின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. முலாம் பழத்தில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி போன்ற இயற்கை ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. கோடைக்காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
முலாம் பழம் சரும செல்களை சுத்தமாக பாதுகாக்கிறது. இதனால் முலாம் பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களின் சருமம், வறட்சி மற்றும் சொரசொரப்பின்றி காணப்படும்.
முலாம் பழத்தை சாப்பிடுவது உடல் நன்மைக்கு மட்டும் இல்லாமல் சருமத்திற்கும் நன்மை அளிக்கக்கூடியது. இதனால் முகத்தில் பூசி மசாஜ் செய்யலாம்.
ஃபேஸ் பேக்:
முலாம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை அரைத்து 2 ஸ்பூன் எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் 1 ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் தேய்த்து ஒரு 15 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரால் அலசிவந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அழிந்து சருமம் புத்துணர்ச்சி அடையும்.
முலாம் பழ ஜூஸ் இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இந்த சாற்றை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வைத்திருந்து முகத்தை அலசி வந்தால் முகத்தில் வழியும் எண்ணெய் பசை குறைந்து, பருக்கள் மறையும்.