சமையல் குறிப்புகள்..!
கத்தரிக்காயை வேகவைக்கும்போது அதன் நிறம் மாறாமல் இருக்க அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து வேகவைக்க நிறம் மாறாது.
ரசம் தாளிக்கும்போது அதில் சிறிது நெய் சேர்த்து தாளிக்க ரசம் சுவையாக இருக்கும்.
உப்பு நீரில் கிழங்கினை சிறிது நேரம் ஊறவைத்து பின் வேகவைத்தால் கிழங்கு வகைகள் சீக்கிரம் வெந்துவிடும்.
கொழுக்கட்டை மாவில் சிறிது பால் சேர்த்து கொழுக்கட்டை செய்தால் விரிசல் விடாமல் இருக்கும்.
கீரைகள் மற்றும் வெண்டைக்காய் செய்யும்போது பாத்திரத்தை திறந்து வைத்து வேகவைக்க அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
குக்கரில் சாதம் வடிக்கும்போது அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து வடிக்க அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
சாம்பார் நல்லா வாசனையாக இருக்க சாம்பார் வைத்து இறக்கியதும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், சிறிது கறிவேப்பிலை சேர்த்து அப்படியே பத்து நிமிடங்களுக்கு மூடி வைக்க சாம்பார் வாசனையாக இருக்கும்.