இது உங்களுக்கு ரொம்ப தேவைப்படும்..!
அடைக்கு மாவு அரைக்கும்போது அதில் தக்காளி சேர்த்து அரைத்து, பின் துருவிய கேரட், பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து சிறிது சுற்று சுற்றி அரைத்து அந்த மாவில் அடை சுட அருமையாக இருக்கும்.
கோதுமை கஞ்சியை வாரம் ஒரு முறை என குடித்து வந்தால் உடலில் இருக்கும் சோர்வு நீங்கி உடல் வலிமை அடையும்.
வாணலில் எண்ணெய் சூடாக்கும்போது அது சில சமையங்களில் புகையை எழுப்பும் அதனை தவிர்க்க சிறிது புளியை எண்ணெயில் சேர்த்தால் அப்படி நடக்காது.
வாழைக்காயை சாப்பிடும்போது அது பெருங்குடலில் உண்டாகும் கழிவுகளை அகற்ற உதவுகிறது.
எலுமிச்சை சாதம் செய்யும்போது சாதம் சூடாக சேர்த்தால் அது ஒருவித கசப்பு தன்மை கொடுக்கும் அதனால் சாதத்தை நன்றாக ஆறவைத்து கிளற வேண்டும்.
உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து அதனுடன் கோதுமை மாவினை கலந்து தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.
ரசம் வைக்கும்போது அதனுடன் புதினா இலைகளை சேர்த்து இறக்கினால் மணமாக இருக்கும்.
சப்பாத்தி காய்ந்து போய்விட்டால் அதன் மேல் சிறிது தண்ணீர் தெளித்து அதனை மீண்டும் தோசைக்கல்லில் வைத்து சூடாக்கினால் மென்மையாக மாறிவிடும்.
இட்லி மாவு அரைத்ததும் அது புளித்து பொங்கி வருவதை தடுக்க மாவின் மீது வாழை இலை வைத்து அதன் மேலே மூடி போட்டு மூடி வைக்கலாம்.
காரகுழம்பு வைக்கும்போது புளிக்கு பதில் தக்காளி சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்பளத்தை பொரிப்பதற்கு பதிலாக அப்பளத்தின் இருபுறமும் எண்ணெய் தடவி நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் பொரித்தது போலவே சுவையாக இருக்கும்.