நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்..!! சிக்கி தவிக்கும் மீனவர்கள்..!!
தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்., எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்வதும்., கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தற்போது தொடர்கதையாகி விட்டது., கடந்த சில தினங்களுக்கு முன் கூட இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்து மொட்டையடித்து அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
அதை தொடர்ந்து சில தினங்கள் முன்பு வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 37 மயிலாடுதுறை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது மேலும் அதிர்ச்சி அளித்தது. இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து நாசம் செய்து வருகின்றனர்.
இதனால், கடும் இன்னலுக்கு ஆளாகி வரும் தமிழக மீனவர்களுக்கு சமீப காலமாக இலங்கை நீதிமன்றம் கோடிக்கணக்கில் அபராதம் விதித்து வருகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரியை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினரின் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..