கேஸ் சிலிண்டரை இப்படி பயன்படுத்துங்க..!
நாம் தினமும் சமைக்க பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரானது நாளுக்கு நாளாக அதன் விலையானது உயர்ந்துக் கொண்டே போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு இது ரொம்ப முக்கியமானதாக இருப்பதில்லை ஒருவேளை கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டால் அவர்களால் விறகு அடுப்பை பயன்படுத்த முடியும் ஆனால் நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நாளைக்கு கேஸ் சிலிண்டர் இல்லை என்றால் அவர்களுக்கு ஒரு கை உடைந்துபோனது போல் உணர்வார்கள், எனவே கேஸ் சிலிண்டரை எப்படி பயன்படுத்தினால் மிச்சம் பண்ணலாம் என்று பார்த்து பார்த்து பயன்படுத்த வேண்டும், அவற்றை இப்போது எப்படி என்று பார்ப்போம்.
- நீங்கள் சமையல் செய்வதற்கு முன்பே சமைக்க தேவையான பொருட்களை தனியே அருகில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பை எரியவிட்ட பின் ஒவ்வொரு பொருளாக தேடிக் கொண்டிருந்தால் அந்த சமையத்தில் சமையல் எரிவாயு வீணாக வாய்ப்பு அதிகம்.
- வேகவைக்கும் பொருட்களை வாணலில் வேகவைக்காமல் ஒரு குக்கரை பயன்படுத்தி அனைத்து பொருட்களையும் வேகவைக்க சமையல் எரிவாயுவின் விரயம் குறையும்.
- ஒரு பொருளை வேகவைக்க அதிக நேரம் தேவைபடுகிறது எனில் அடுப்பை சிம்மில் வைத்து பயன்படுத்துவது சிறப்பானது.
- அடுப்பு சரியான முறையில் எரிவில்லை எனில் அதற்காக பர்னரை குத்தி சந்துகளை பெரியதாக செய்தல் ஆகியவற்றை செய்யவே கூடாது.
- அடுப்பை அணைக்கும்போது கூடவே சிலிண்டரையும் அணைப்பது என்பதை செய்தால் எரிவாயு சீக்கிரமாக காலியாகாது.
- சமைக்கும் அரிசிகள் மற்றும் தானியங்களை சமைப்பதற்கு முன்பே சில மணி நேரங்களுக்கு ஊறவைத்து பின் சமைக்க சீக்கிரமாக வெந்துவிடும் மேலும் சமையல் எரிவாயு பயன்பாட்டையும் குறைக்கலாம்.
- சமைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் சமைக்கும் நேரத்தில் அதனை மூடி வைத்து சமைத்தால் சமைக்கும் பொருள் சீக்கிரமாக வெந்துவிடும்.
- சமைக்கும் நேரத்தில் சமைக்க தேவையான பாத்திரங்களை அவசர அவசரமாக கழுவி உடனே அடுப்பில் வைத்து சமைத்தல் கூடாது. இதுபோல என்னைக்கோ ஒருநாள் என்று செய்தால் பரவாயில்லை தினம் தினம் இப்படி செய்து வந்தால் கேஸ் சிலிண்டர் சீக்கிரமாக காலியாகிவிடும்.
- அடுப்பில் இருக்கும் பர்னர்களில் அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகள் அடிக்கடி சேரும் அவற்றை அடிக்கடி பார்த்து சுத்தம் செய்து வைத்துக்கொண்டால் கேஸ் சிலிண்டர் வீணாவதை நாம் தடுக்கலாம்.