முடி உதிர்வுக்கு இத ட்ரைப் பண்ணுங்க..!
முடி உதிர்தல் என்பது பலருக்கும் இக்காலக்கட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும், சிலருக்கு இதனால் மன அழுத்தமானது அதிகரிப்பது கூட உண்டு.
ஆனால் நாம் முடி கொட்டுகிறதே என்று கவலை பட்டுக் கொண்டிருந்தால் அதனால் நமக்கு ஒரு சில ஹார்மோன்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதுவே நம் முடி கொட்டுவதற்கு ஒரு வழியாக அமைகிறது.
முடி கொட்டுவதை எப்படியெல்லாம் சரிசெய்யலாம் என ஒரு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம் வாங்க…
- முடி உதிரும் இடத்தில் நில அவரை இலையை அரைத்து தேய்த்து வரலாம்.
- காய்ந்த நெல்லிக்காய், கரிசாலை இலை, அதிமதுரம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வர தலைமுடி உதிர்வை நிறுத்தலாம்.
- முடி கொட்டியிருக்கும் இடத்தில் சின்ன வெங்காயத்தை அரைத்து அதிலிருந்து சாறு எடுத்து அதனை தடவி ஊறவிட்டு தலைக்கு குளித்து வர முடி உதிர்தலை நிறுத்தலாம்.
- தேங்காய் எண்ணெயில் கரிசலாங்கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து நீர் வற்றும் வரை காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தலை தடுத்து தலைமுடி நீண்டு வளரும்.
- செம்பருத்தி பூவை கெட்டியாக அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவைத்து தலையை அலசி வர கூந்தல் உதிர்வு நின்று தலைமுடி ஆரோக்கியமாக வளரும்.
- கூந்தல் ஆரோக்கியமாக நீண்டு வளர கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட எடுத்துக் கொள்ள வேண்டும்.
- முக்கியமாக புரதம் நிறைந்த முட்டை, பால், பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- மன அழுத்தமானது நீண்ட நாட்களுக்கு தொடர்வதினால் முடி உதிர்தல் பிரச்சனையும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
- தலைமுடியில் ஜடை பிண்ணுவதிலும் சிலவகை இறுக்கமான அலங்காரங்களினாலும் தலைமுடி கொட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவே தளர்வான ஜடை அலங்காரங்களை செய்துக் கொள்ளுதல் வேண்டும்.