கடந்த வாரம் முழுவதும் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இன்று தொடர்ந்து 2வது நாளாக சரிந்துள்ளது.
சென்னையில் இன்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,645 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 45,160 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6,111 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 48,888 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 60 காசுகள் குறைந்து 78 ரூபாய்க்கும் கிலோவிற்கு 600 ரூபாய் குறைந்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவது தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைத்து, விலையில் சரிவை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post