“லெபனானில் இருந்து ட்ரோன் தாக்குதல்..” நெதன்யாகு பேட்டி..!
இஸ்ரேலின் சிசேரியா நகரில் லெபான் ட்ரோன் தாக்குதல் நடதப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபான் நடத்திய இந்த தாக்குதலானது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது..
இந்த ட்ரோன் தாக்குதலானது சிசேரியாவில் உள்ள கட்டிடங்களை சேதப்படுத்தி உள்ளது.., அதிஷ்டவசமாக அந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது..
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு சிசேரியாவில் உள்ள தனது வீட்டில் வேண்டுமென்றே ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்..
இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை அப்படி இருந்தால் அதற்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டி இருந்து இருக்கும் என அவர் கூறினார்..
இதற்கிடையில் இரண்டு ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டது, அப்போது வடக்கு டெல் அவிவில் உள்ள கிலிலோடில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அதனால் அங்கு மட்டும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு வரும் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர், கடந்த அக்டோபர் 16ம் தேதி நடந்த தாக்குதலில் தாக்கப்பட்டார்…
வியாழக்கிழமை அவரின் உயிரிழப்பை இஸ்ரேல் அறிவித்தது. இது நடந்து சில நாட்களுக்கு பின்பு லெபனானில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..