இழுத்தடிக்கும் ஆளுநர்.., வலியுறுத்தும் பொன்முடி..!! டாக்டர் பட்டம் யாருக்கு…?
சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகி, மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்த, சட்டமன்ற உறுப்பினரான என்.சங்கரய்யா, தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு கூட்டத்தில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 02-ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..