பச்சை கொடி காட்டியாச்சி போலாம் ரையிட்..!!
இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக ட்ரான்சிட் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாட்டின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவை, என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகர் பகுதிகள் முழுதும் உள்ளடக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, டெல்லி – காஜியாபாத் – மீரட் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த பிராந்திய விரைவு போக்குவரத்து சேவை இன்று தொடங்கப்பட்டது.
இது காசியாபாத், குல்தார் மற்றும் துஹாய் நிலையங்கள் வழியாக சாஹிபாபாதை, துஹாய் டிப்போவுடன் இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஷாஹிபாபாத் – துஹாய் டிபோட் இடையிலான முதல் அதிவேக ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
அதிகபட்சமாக இந்த ரயில்கள் 180 கி.மீ. வேகத்தில் செல்லும் என்றும். முதல்கட்டமாக 30 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
Discussion about this post