இனி மெட்ரோல இதே தப்ப பண்ணாதீங்க..!!
மெட்ரோ எந்த அளவிற்கு வேகமாக செல்கிறதோ அதே அளவிற்கு மக்களின் பயணமும் அதிகரித்துள்ளது.., ஆனால் சிக்கல்களும் அதிகரித்துள்ளது.
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நாம் இரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்ய பயணசீட்டு தேவை.., ஆனால் மெட்ரோ அதற்கு நேர் மாறாக மாற்றிவிட்டது.
அதாவது மெட்ரோ துவங்கிய ஆரம்ப காலத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்தோ அல்லது கோயம்பேட்டில் இருந்தோ எந்த இடத்தில் நம் பயணத்தை தொடங்குகிறோமோ
பயணம் முடியும் இடத்தில் அந்த காயினை காண்பித்து அதாவது அங்குள்ள அவுட் மிஷினில் போட்டு விட்டு வெளியே வரும் படி கொண்டு வந்தார்கள்.
அதன் பின் கியுஆர் கோடு வந்தது.., இப்போ மோபைல் போனில் மட்டுமே டிக்கெட் வருகிறது.., இது மக்களுக்கு பயனுள்ளதா என கேட்டால் இல்லை என சொல்லலாம்.
காரணம் நம் மொபைல் எண்ணிற்கு டிக்கெட் அனுப்பிவிட்ட பின் நாம் பயணிக்கும் நேரத்தில் மொபைல் ஸ்விட்ஸ் ஆப் ஆகிவிட்டால்.., நாம் இறங்குவது மிக சிரமம் ஆகிடும்.
பயணசீட்டு கொடுக்கும் அலுவலர் கூட இதை மக்களுக்கு தெளிவாக விவரித்து சொல்லாமலும் கேட்காமலும் பயணசீட்டு கொடுக்கிறார்கள்..
ஆனால் நீங்கள் அப்படி இல்லாமல் விழிப்புடன் பயணம் செய்யுங்கள். முதலில் நீங்கள் மெட்ரோவில் பயணம் செய்யும் போது மெட்ரோ கார்டு வைத்திருந்தால் பயணசீட்டின் விலை குறைவாக இருக்கும்.
அல்லது நீங்கள் முதல் முறை பயணம் செய்கிறீர்கள் என்றால் பயணசீட்டு எடுக்கும் போது அதனை மொபைல் எண்ணிற்கு கொடுக்காமல் டிக்கெட் ஆக பெற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு வேளை நீங்கள் மொபைல் எண்ணிற்கு வாங்கிவிட்டால்.., உங்கள் மொபைல் என் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டாலோ அல்லது ஸ்கேனர் வேலை செய்யாமல் போனாலோ நீங்கள் வெளியே வருவது கஷ்டம்.., அடுத்த முறை நீங்கள் மெட்ரோவில் செல்லும் போதை அதே மொபைல் எண்ணை காண்பித்தால் கூடுதல் பணம் காட்டும்..
எனவே இனி விழிப்புடன் மெட்ரோவில் பயணம் செய்யுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..