“பணத்தை வைத்து அன்பை இழக்காதே” லதாமங்கேஷ்கர்.. சொன்ன கடைசி வார்த்தை..!
இந்தியப் பின்னணிப் பாடகிகளில் மிகவும் புகழ்பெற்றவர் “லதா மங்கேஷ்கர்” இவர் பாடகியாக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். இவர் இந்தியாவின் மிக பெரிய பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தையான ” ந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை”.. என்பது பலரின் மனதில் பதிந்த ஒன்று.. இந்தியாவில் மிக விலையுயர்ந்த பிராண்டட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்..
அனைத்து விதமான டிசைனர் புடவைகள்.., விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், விலையுயர்ந்த நகைகள் என அனைத்தும் என் வீட்டில் இருக்கிறது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய குட்டை கவுனில் எனது காலம் முடிய போகிறது என எதிர்பார்க்கவில்லை.
எனது வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் என்னால் அதை கடைசி காலம் வரை எடுத்து செலவு செய்ய முடியவில்லை.., அரண்மனை போல வீடு இருந்தாலும் எனக்கு கிடைத்தது மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கை அறை..
நான் இந்த உலகில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு கூட என்னால் தனியாக செல்ல முடியவில்லை. ஒரு காலத்தில் 7 சிகை அலங்கார நிபுணர்கள் என் தலைமுடியை சரி செய்வதற்காக எனது வீட்டிற்கு தினமும் வருவாங்க.
ஆனால், இப்போ என் தலையில முடியை இல்லை. நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டிருக்கிறேன்.., நினைத்தது நினைத்த நேரத்திற்கு கிடைக்கும்.., ஆனால் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியவில்லை. சாப்பிடும் முன் இரண்டு மாத்திரைகள் மற்றும் இரவில் ஒரு துளி உப்பு.
நான் வெவ்வேறு விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்து இருக்கிறேன். ஆனால், இன்று இரண்டு பேர் உதவி இருந்தால் மட்டுமே என்னால் நிற்க முடியும் .. நான் சேர்த்த சொத்துக்கள் எனக்கு உதவவில்லை. அதற்காக நான் எந்த வகையிலும் தளரவில்லை. ஆனால், சில அன்பான மனிதர்களின் முகங்கள், அவர்களின் பிரார்த்தனைகள் என்னை வாழ வைக்கிறது.
இதுதான் வாழ்க்கை. எவ்வளவு தான் பணம், செல்வம், இருந்தாலும் கடைசியில் வெறுங்கையுடன் சென்று விடுவீர்கள். எனவே பணம் மட்டும் சம்பாதிப்பது வாழ்க்கை என்று நினைக்காமல்
அன்பான மனிதர்களையும் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள், உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். “இனி பணத்தை வைத்தும் அதிகாரத்தை வைத்தும் மக்களை மதிப்பிடுவதை தவிர்திடுங்கள்..
அனைவரையும் நேசியுங்கள், உங்களுக்காக இருப்பவர்களை இன்னும் அதிகமாக நேசியுங்கள், யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க. ஏனென்றால் எதிர்காலத்தில் பணம் மட்டும் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடாது.., அன்பான மனிதர்களும் வேண்டும்..
லதாமங்கேஷ்கர் மரணம் :
லதா மங்கேஷ்கர் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி அன்று கோவிட்-19 நேர்மறை சோதனை செய்த பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். 28 நாட்கள் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த லதாமங்கேஷ்கர் பிப்ரவரி 6ம் தேதி இரவு காலமானார்..
இவரது மரணம் இந்திய திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியது அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மட்டுமின்றி.., அரசியல் பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
விருதுகள் :
பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் தாதாசாகேப் பால்கே விருதுகளைப் பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தார், இந்திப் படங்களின் விரிவான பட்டியலுக்குப் பின்னணிப் பாடியவர்.. மராத்தி மற்றும் பெங்காலி உட்பட பல பிராந்திய மொழிகளிலும் பாடியுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..