போராட்டத்திற்கு வந்த மக்களுக்கு பிரியாணி.. வாங்கும்போது ஏற்பட்ட தள்ளு முள்ளு..!
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் , மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை கண்டித்தும் , அதனை உடனடியாக திரும்பப் பெறக் கூறியும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்குவதை நிறுத்தியதை கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனைதொடர்ந்து, கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு ஆர்.பி. உதயக்குமார் , அசைவ உணவு நான்கு வழி சாலை ஓரத்தில் வழங்கப்பட்ட போது , கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிக்கி முதியவர்கள், மூதாட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
-பவானி கார்த்திக்