சிக்கன் மட்டன் வாங்கும் போது இதை கவனிக்க மறக்காதீங்க..!
சிக்கன் மட்டன் வாங்கும் பொழுது பலரும் செய்கின்ற தவறு, காசு கொடுத்த உடன் பொருள் கிடைக்கிறது. அல்லது ஆர்டர் செய்தவுடன் வருகிறதா என்று தான்.
அப்படி வாங்கும் பொழுது அவை சுத்தமாக இருக்கிறதா புதிய சிக்கன், மட்டன் தான என்று நாம் யோசிப்பதில்லை. இதனால் நம் உடலுக்கு தான் தீங்கு விளைவிக்கிறது. ஆனால் அடுத்த முறை இந்த தவறை செய்ய வேண்டும்.
அடுத்த முறை சிக்கன் மற்றும் மட்டன் வாங்கும் பொழுது இதை செய்ய மறக்காதீர்கள்.
* மட்டன் வாங்கும் பொழுது முதலில் கவனிக்க வேண்டிய ஒன்று அதன் நிறம், மட்டன் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது புதிய மட்டன்.

* சாம்பல் நிறத்தில் இருந்தால் அது பழைய மட்டன்.
* சிக்கன் பிங்க் நிறத்தில் இருந்தால் அவை புதிய சிக்கன், அதுவே பால் நிறத்தில் இருந்தால் அது பழைய சிக்கன்.


* இறைச்சி வாங்கும் பொழுது அவற்றை தொட்டு பார்த்து வாங்க வேண்டும், தொட்டவுடன் பள்ளம் போல் குழி விழுந்தால் அது பழைய இறைச்சி. தொட்டவுடன் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தால் அது புதிய இறைச்சி.
* மட்டனில் எலும்பு போன்ற மார்பிலிங் காணப்பட்டால் அவற்றை வாங்கலாம். இவை சமைப்பதற்கு ஏற்றவையாகவும். சமைத்த பின் ருசியாகவும் இருக்கும்.

* சிக்கன் தொடைகறி வாங்கும் பொழுது கொழுப்பு இல்லா ( மேல் தோல்) இல்லா சிக்கன் வாங்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post