மார்கழி மாதத்தில் இதை செய்ய மறக்காதீங்க..!!
இந்த மாதத்தில் உயிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதால் எந்த ஒரு சுப காரியம் நிகழ்ந்தாலும் அது நமக்கு உயர்வு கொடுக்காது. இந்த காரணங்களாலையே இந்த மாதத்தில் சுபகாரியங்கள் நிகழ்வதில்லை.. அது மட்டுமல்ல இந்த மாதத்தில் எந்த பயிர்களும் விதைக்கப்படாததற்கு காரணமும் இது தான்..
அப்படி உயர்வு கொடுக்காத இந்த மாதத்தில்., வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் அதிகமாக இருக்க இதை செய்ய மறக்காதீங்க
- முதலில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வாசலில் கோலமிட வேண்டும்.
- பின் வீட்டு வாசப்படியில் 2 தீபம் ஏற்றி விட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
- மார்கழி மாதம் முடியும் வரை தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
- காலையில் எழுந்த உடன் முன் வாசல் கதவை திறந்த பின் தான் பின் வாசல் கதவை திறக்க வேண்டும்.
- அப்படி திறக்கும் போது கஜலட்சுமி என்ற மந்திரத்தை உச்சரித்து திறந்தாள் லக்ஷ்மி வாசம் வீசும்
- வீட்டு வாசலில் சாணம் அல்லது மஞ்சள் நீர் தெளித்து கோலமிட்டு, அதில் செம்பருத்தி பூவை வைக்க வேண்டும்.
- திருமண வயதில் இருக்கும் பெண்கள், திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள் மார்கழி மாதம் காலையில் விநாகருக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி திருமண வரன் கைகூடும்..
- தினமும் காலை திருப்பாவை, திருவெண்பாவை பாசுரங்கள் பாடுவது, கந்தசஷ்டி கவசம் கேட்பது இன்னும் சிறந்த பலனை கொடுக்கும்..
- இந்த மாதத்தில் முடிந்த அளவிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு பூஜை பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
- குறிப்பாக இந்த மாதத்தில் பசித்தோருக்கு அன்னதானம் வழங்குவது இன்னும் புண்ணியத்தை கொடுக்கும்..
இதை செய்து வழிபட்டு பாருங்க கட்டாயம் உங்களது வீட்டில் லக்ஷ்மி வாசம் செய்வாள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..