“பணவரவை அதிகரிக்கும் வெற்றிலை..” வீட்டில் இதை செய்ய மறக்காதீங்க..!!
பணக்கஷ்டமானது பலரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை.., பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது..?
ஒரு சிலர் தன் வாழ்நாளில் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் பணக்கஷ்டத்துடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
அப்படி வீட்டில் பணவரவு அதிகரிக்க செய்து.., தரித்திரத்தை துடைத்து வீட்டில் பணவரவை அதிகரிக்க உதவும் வெற்றிலை பரிகாரம் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
பணவரவு அதிகரிக்கும் வழிகள் :
இந்த பரிகாரத்தை குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும்.
அதிலும் தொடர்ந்து 12 செவ்வாய் அல்லது வெள்ளிகிழமைகளில் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு பின் 11 அல்லது 21 வெற்றிலைகள் எடுத்து தண்ணீரில் நனைத்து துடைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதை ஒரு தாம்பாள தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்..
பின் ஒவ்வொரு வெற்றிலைக்கும் சந்தனம் குங்குமம் வைத்து நம் மனதில் இருக்கும் கஷ்டங்களை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும்..
இந்த வழிபாட்டை குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது விநாயகப் பெருமான் இவர்களில் ஒருவரை மனதார நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.
இப்படி வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த வெற்றிலையை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
அன்று மாலை வீட்டில் விளக்கேற்றி பூஜையை முடித்த பிறகு ஒரு வெள்ளை நூலை எடுத்து அதில் மஞ்சள் தடவி வெற்றிலையை மாலையாக கட்ட வேண்டும்.
கட்டிய இந்த வெற்றிலை மாலையை நம் வீட்டில் நிலை வாசலில் மாட்டி விட வேண்டும்.
அடுத்த வாரம் இதே முறையில் வழிபாடு செய்து பழைய வெற்றிலை மாலையை கழட்டி கால் படாத இடத்தில் போட்டு விட்டு புதிய மலையை வாசலில் கட்டவும்.
இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் நீங்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..