சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இதை செய்ய மறக்காதீங்க…!!
கந்த சஷ்டி விரதம் துவங்கி ஆறாவது நாள் இன்று. மற்ற ஐந்து நாட்கள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, இன்றைய நாள் முருகனை நினைத்து விரதம் இருப்பார்கள். இன்றைய தினம் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்களுடைய வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இன்று மாலை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
அப்படி சூரசம்ஹாரம் நடந்து முடிந்த பின் பக்தர்கள், அனைவரும் இதை செய்தால் நம்முடைய கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகள் விலகி விடும் என்பது ஐதீகம்..
முதலில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் தலைக்கு குளிக்க வேண்டும்.. இது சாஸ்திரம் என சொல்லுவார்கள்..
அதாவது குளிக்கும் தண்ணீரில் இந்த பொருட்களை சேர்த்து பின் முருகனின் திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்.
புனித நீர் தாயாரிக்கும் முறை :
ஒரு சின்ன சொம்பு அல்லது ஏதாவது சுத்தமான பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாத்திரம் நிரம்ப தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் 6 துவரம் பருப்பு, 6 சிட்டிகை மஞ்சள் தூள், 6 சிட்டிகை சந்தன பொடி, அப்படி இல்லையென்றால் சந்தன வில்லையை தூள் செய்து போடுங்கள்.
கொஞ்சமாக கல் உப்பு, கொஞ்சமாக பன்னீர் ஊற்றி இந்த தண்ணீரை ஒரு மூடி போட்டு அப்படியே ஓரமாக வைத்து விடுங்கள்.
இந்த தண்ணீரில் போடப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் அந்த தண்ணீரோடு சேர்ந்து ஊரட்டும். இந்த பொருட்கள் எல்லாமே முருகப்பெருமானுக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பொருட்கள்.
பிறகு மாலை சூரசம்காரம் முடிந்தவுடன், இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த தண்ணீரை கையில் வைத்துக்கொண்டு ஓம் முருகா ! குரு முருகா ! அருள் முருகா ! என்ற இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி இந்த தண்ணீரை குளிக்கின்ற தண்ணீரோடு, இந்த சக்தி வாய்ந்த முருகன் அருள் பெற்ற தீர்த்தத்தையும், சேர்த்து ‘ஓம் முருகா ! ஓம் முருகா’ என்ற நாமத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இந்த தண்ணீரை கொண்டு தலைக்கு குளித்து விட வேண்டும்.
உடல்நலம் சரியில்லாதவர்கள்., மாலையில் உடம்பிற்கு குளித்தால் போதும்..
அதுவும் முடியாதவர்கள் இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்ளலாம்..
அதன் பின்னர் எளிமையாக பூஜை செய்து வழிபடலாம்.. அப்படி செய்தால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் விலகி விடும் என்பது ஐதீகம்..
அதி அற்புதம் வாய்ந்த சக்தி வாய்ந்த இந்த நாளில், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு லட்சக்கணக்கான முருக பக்தர்கள், முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்து, வேண்டிக் கொண்டிருக்கின்ற அந்த சமயத்தில், அனைவர் மனதிலும் முருகர் இருக்கக்கூடிய அந்த சமயத்தில், நாம் வைக்கக் கூடிய வேண்டுதலானது நிச்சயம் பலிக்கும்.
அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..