அமரன் திரையிட தடை..!! படத்திற்கு வந்த புது சிக்கல்..!! அதிர்ச்சியில் படக்குழு..!!
சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில்., தீபாவளி அன்று வெளியான படம் தான் “அமரன்..” தமிழ்நாட்டில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜரின் வாழ்க்கையை எடுத்து சொல்லும் விதமாக “ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி” என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது…
இந்நிலையில் இப்படத்தை திரையிடக் கூடாது என புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது..
விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது போல அமரன் படத்தை தயாரித்த கமலை டார்கெட் செய்து அவருக்கு எதிராக போராட சில அமைப்பினர் திட்டமிட்டுள்ளதால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு நடிகர் கமல் விஸ்வரூபம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அதில் இடம்பெற்றக் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் போர்க்கொடி உயர்தினர்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள அமரன் படத்தை கமல் தயாரித்துள்ளார்.
அப்பாடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என எஸ் டி பி ஐ கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல் அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது அதை அடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..