“ஆடிபூரம் வழிபாடு.. குழந்தை வரம் கிடைக்க, திருமண தடை நீங்க” இதை செய்ய மறக்காதீங்க..!!
ஆடிப்பூரம் அன்று இந்த இரண்டு விஷயங்களை செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்..
திருமண தடை நீங்க :
அதாவது ஆடிப்பூரம் அன்று திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் அம்மனுக்கு வளையல் அல்லது மஞ்சள் கயிறு வாங்கி கொடுத்து வழிபட்டால் அடுத்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறும் என்பது ஐதீக உண்மை…
குழந்தை வரம் கிடைக்க :
குழந்தை இல்லாத தம்பதியினர்.., குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து மாலை நேரத்தில் அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பார்த்து.. அங்கு அம்மனுக்கு வளைகாப்பு முடிந்ததும்… அந்த வளையல் வாங்கி அணிந்து கொண்டால்.. அடுத்த வருடத்திற்குள் குழந்தை வரம் கிடைத்து.. அந்த குழந்தையுடன் அம்மன் முன் நிற்பீர்கள் என்பது ஐதீக உண்மை..
அந்தளவிற்கு அம்மனின் அருளை பரிபூரணமாக பெற்றுத் தரும் நாள் இந்த ஆடிப்பூரம்.
வேண்டுதல் நிறைவேற்றியவர்கள் அம்மனை தவறாமல் வழிபட வேண்டும்…
பூரம் நட்சத்திரம்
* ஆகஸ்ட் 6ம் தேதி நேற்று மாலை 6.42 மணி தொடங்கிய ஆடிப்பூரம்.. இன்று
(ஆகஸ்ட் 7ம் தேதி) இரவு 9.30 வரை இருக்கும்..
ஆடிப்பூரம் வழிபடும் நாள் & நேரம் :
7-08-2024 : காலை 6 மணி முதல் 7.15 மணி வரை
9.05 மணி முதல் 10.20 மணி வரை..
கேட்ட வரம் கிடைக்க :
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் “ஒரு மரப்பலகையில் கோலமிட்டு சிவப்பு துண்டு விரித்து அதில் அம்மனின் திருவுருப் படத்தை வைத்துக்கொள்ளவும்…
பின் படத்தை சுற்றி சந்தனம், குங்குமம், மஞ்சள், பூ ஆகிய மங்கலப் பொருட்களை தாம்பூலத்தில் வைத்து அம்மனுக்கு நலங்கிடுங்கள்.
இதையடுத்து கருணையின் வடிவமான அம்மனின் ஸ்லோகம் படிக்கவும். அம்மனின் பாதத்தில் அட்சதை போட்டு திரு உருவப்படத்திற்கு வளையல் மாலை அணிவிக்கவும்.
இதன் பிறகு அம்மன் படத்தை பூஜை அறையிலேயே வைக்கவும். மரப்பலகையை கிழக்கு மேற்கு திசையில் வைத்து சிவப்பு துணிக்கு பதிலாக வெள்ளை நிற துணி போட்டு யாருக்கு திருமணம் நடக்க வேண்டுமோ, குழந்தை வரன் வேண்டுமோ அவர்களை அந்தப் மரப்பலகையில் அமர வைத்து கைகளில் கண்ணாடி வளையல் போட்டு உறவினர்களை வாழ்த்தச் சொல்லுங்கள்.
அடுத்ததாக அவர்களை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அம்மனை வழிபடச் சொல்லுங்கள்.
உறவினர்கள் இல்லாத பட்சத்தில் கணவரே தனது மனைவிக்கு இதனை செய்யலாம்.
இறுதியாக கோவிலுக்கு சென்று டஜன் வளையல் வாங்கி அம்மனுக்கு கொடுங்கள். அங்கு வரும் பெண்களுக்கு வளையல் தானம் செய்யுங்கள். கோவிலில் உள்ள மரத்தில் குழந்தை வரன் வேண்டி தொட்டில் கட்டவும்.
அப்படி செய்தால்.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்..
இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..