“டெல்லியில் கெஞ்சும் அண்ணாமலை..” பதவி பறிபோகுமா..? தலைவர்கள் எடுத்த முடிவு..?
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் சம்மந்தமான உயர்கல்வி படிப்பதற்காக இலண்டன் செல்ல இருப்பதாக கூறியிருந்தார். அதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக டெல்லியில் மூத்த தலைவர்களை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்..
ஆனால் அவரது கோரிக்கையை மூத்த தலைவர்கள் ஏற்க மறுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிட்டது. அப்போது “அதிமுகவை விட அதிக இடங்களில் 2ம் இடம் வருவோம்., 10 இடங்களில் வெற்றி பெறுவோம்” என அண்ணாமலை டெல்லி தலைமையிடம் கூறியிருந்தார்.
அதனால் அண்ணாமலையை நம்பி 8க்கும் மேற்பட்ட முறை மோடி தமிழகம் வந்து பிரசாரம், வாகனப்பேரணி எல்லாம் நடத்தினார். ஆனால் 21 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது . கூட்டணி கட்சியும் கூட 2 இடங்களில் மட்டுமே அதிமுகவை விட சில வாக்குகள் பெற்று பாஜக முன்னிலை வகித்தது.. பாஜகவுடன் போட்டியிட்டதால் பாமக போட்டியிட்டு டெபாசிட் இழந்ததோடு, தனது வாக்கு வங்கியையும் இழந்தது.
தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்கு காரணம்.., தாம் தான் என நினைத்த அண்ணாமலை
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலை டெல்லி சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். தன்னிடம் கடிதம் வாங்க மாட்டார்கள், என எண்ணிய அண்ணாமலை தொடர்ந்து கட்சிப் பதவிகளில் தொடருங்கள் என்று கூறுவார்கள் என எதிர்பார்த்துள்ளார். ஆனால் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாங்கிக் கொண்டுள்ளார்.
இதனால் தன்னை மாற்றிவிடுவார்களோ என நினைத்து அவரது தீவிர ஆதரவு தலைவரான பி.எல்.சந்தோஷ் மூலம் கட்சியில் நடக்கும் விவாதங்களை தெரிந்து கொண்டு, வெளிநாடு சென்று படிக்க விருப்பம் தெரிவிப்பதாக ஒரு பிட்டைப் போட்டுள்ளார். அதற்காக விண்ணப்பமும் செய்துள்ளார். ஆனால் டெல்லி மேலிடம் அவரை படிக்க அனுமதி அளித்தது. இது அண்ணாமலைக்கு பேர் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும், அவருக்கு பதிலாக புதிய தலைவரைப் போடலாமா அல்லது பொறுப்பாளர்களைப் போடலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், ஆனந்தன் ஆகியோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ போடலாமா என்றும் ஆலோசித்து வருகிறது. இருவர் என்றால், ஒருவரை மாநில தலைவராகவும், மற்றொருவரை செயல் தலைவராகவும் நியமிக்கலாமா என்றும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து கொண்டே படிப்புடன் கட்சியையும் பார்த்துக்கொள்ளலாம் என அண்ணாமலை கூறியுள்ளார்.. ஆனால் கட்சியின் மேலிடத் தலைவர்கள் அண்ணமாலையை கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அண்ணாமலை தொடர் முயற்சியாக டெல்லியில் தனது கோரிக்கையை மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறார். ஆனால் டெல்லி மேலிடமோ, இவர் எப்போது பெட்டியைக் கட்டுவார், எப்போது புதிய நிர்வாகிகளை நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..