அடிக்கும் வெயிலிலும் சருமம் அழகாக இருக்க வேண்டுமா..? இதை ட்ரை பண்ணுங்க.
அடிக்கும் வெயிலிலும் சருமம் அழகாக இருக்க வேண்டுமா..! இதை ட்ரை பண்ணுங்க.
சித்திரை காலம் வந்தவுடன் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம் உடலை பார்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவோம். அதே போல தான் நம் சருமமும்.., சிறிது நேரம் வெயிலில் சென்று வந்தாலே பிரதிபலித்த நம் முகம் சுருங்கிய தோற்றத்தில் காணப்படும்.
அப்படி முகம் சுருங்காமல் என்றும் பொலிவுடன் இருக்க, சில பாரம்பரிய வழிமுறைகளை பின் பற்றினாலே போதும்.
பப்பாளி : பப்பாளியில் எந்த வித ரசாயனமும் கலக்காத ஒரு எக்ஸ்ஃபோலியண்ட் உள்ளது. பப்பாளியை தேனில் கலந்து முகத்தில் ஒரு 10நிமிடம் தேய்த்து, சூடு நீரில் கழுவினால் போதும்.
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, இறந்த செல்களை அழிக்க உதவுகிறது. இதனால் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும்.
கற்றாழை: முகத்தில் உள்ள கருமை நீங்க கற்றாழை மிகவும் உதவுகிறது. கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து, எலும்பிச்சை சாற்றில் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடத்தில் கழுவி விட வேண்டும்.
வாரத்தில் இரண்டு முறை, இப்படி செய்தால் போதும். கருமையை நீக்கி முகத்தை பொலிவுடன் வைக்கும்.
மஞ்சள் : மகத்துவம் நிறைந்த ஒன்று, உணவு, மருத்துவம் என அனைத்திலும் பயன் படுத்த படும் ஒன்று. மஞ்சளில் ஆக்சிஜன் தரக்கூடிய பண்புகள் அதிகம் இருப்பதால்.
சருமத்திற்கு இயற்கையான அழகை தருகிறது. மஞ்சளில், கடலை மாவு, தயிர் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடத்தில் கழுவி விட வேண்டும்.
சந்தனம் : சருமத்தை ஒளிர செய்வது மட்டுமின்றி, முகப்பருவையும் வராமல் தடுக்க உதவுகிறது.
வாரத்தில் இரண்டு முறை, 15 ல் இருந்து 20 நிமிடம் வரை சந்தனத்தை முகத்தில் பூசி வர, சருமத்தை பாதுகாப்பாக வைப்பதோடு, முகப்பரு வராமல் தடுக்க உதவுகிறது.
தேன் : உடலிற்கு மட்டும் ஆரோக்கியம் கொடுக்காமல், முகத்திற்கும் கொடுக்கிறது.
தேனில் சிறிதளவு எலும்பிச்சை சாறு கலந்து, பேஸ் பாக் ஆக பயன் படுத்த வேண்டும். அப்படி செய்தால் சருமம் என்றும் மென்மையாகவே இருக்கும்.
Discussion about this post