“கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்தவர் எம்.ஜி.ஆர்…” தவெக தலைவர் விஜய் புகழாரம்…!
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை மாவட்டம் தோறும் அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரது திருவுருவ படம் அமைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், எம்.ஜி.ஆர். குறித்து புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் புகலஞ்சலி செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார், அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார், அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார்”. இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம். என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக்கத்தின் முதல் மாநாட்டில் கூத்தாடி என்ற சொல்லுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ள கூத்தாடி என்று குறிப்பிட்டிருப்பது அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..