ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன் தெரியுமா..?
கடந்த சில மாதங்களாக ஆன்மீக தகவல்கள் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். அதிலும் இந்த மாதம் “ஆடி” மாதம்..,சில முக்கிய வழிபாடுகள் மற்றும் தெய்வங்கள் பற்றி பார்க்கலாம்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் மிகவும் விஷேசமான மாதம். ஊரெங்கும் திருவிழா, சிறப்பு தரிசனம் மற்றும் கூழ் ஊற்றுவது வழக்கம். மற்ற மாதங்களில் இல்லாமல் ஆடி மாதம் மட்டும் கூழ் ஊற்ற என்ன காரணம்..? இந்த நாளில் எந்த அம்மனை வழிப்பட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
ஆடி மாதம் முக்கியமாக “பெரிய பாளையத்து அம்மன்” அவர்களுக்கு தான் மிகவும் விஷேசம்.
பூமாதேவி அம்மன் பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் “ஆடி”.., பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய பரம சிவன் “ஆடி மாதம்” அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என்ற வரத்தை அளித்தார்.
இந்த மாதத்தில் மட்டும் அம்மனுக்கு சக்திகள் அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் மட்டும் சிவனின் சக்தி அம்மனின் சக்திக்குள் அடங்கி விடும்.
முனிவர் “ஆடி மாதம்” தவம் புரிந்த பொழுது பார்வதி தேவி அம்மன் வரம் அளித்த பின் முனிவர் பார்வதி அம்மனுக்கு கொடுத்த உணவு “கூழ் ” இதனால் அம்மன் சுவாமி களுக்கு “கூழ்” மிகவும் பிடித்த ஒன்று.
அதிலும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மிக முக்கியமான நாட்கள்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு..,கூழ் படையல் வைத்து மற்றும் எழும்பிச்சை பழ மாலை அணிந்து வழிப்பட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
வீட்டில் கூழ் ஊற்றும் பொழுது:
நம் வீட்டில் கூழ் ஊற்றும் பொழுது நம் இஷ்ட தெய்வம், மற்றும் குல தெய்வம் மற்றும் பெரிய பாளையத்து அம்மன், 3 பேரும் வயதானவர்கள் ரூபத்தில் வருவார்களாம்..,
எனவே வீட்டில் கூழ் ஊற்றும் நொடி முதலில் 3 வயதானவர்களுக்கு கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுத்தால்.., அம்மனே நம்மிடம் வந்து வாங்குவதற்கு சமம் ஆகும்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், திருத்தலங்கள், வழிபாடுகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..