மகேந்திரவாடி குடைவரை கோயில் வரலாற்றின் ரகசியம் தெரியுமா..? தெரிவோம் அறிவோம் -25
சென்னை அடுத்த அரக்கோணம் அருகேயுள்ள மகேந்திரவாடி பகுதியில் குடைவரை கோவில் உள்ளது.., சுமார் 1500 ஆண்டுக்கு முன் மகேந்திர தடாகம் என்ற ஏரி கரையில் பல்லவ மன்னன் மகேந்திர விஷ்ணு ஒரு பாறையை தேர்வு செய்தார்.
அந்த பாறையை குடைந்து உருவாக்கப்பட்டு வரலாற்று பொக்கிஷமே “மகேந்திரவாடி குடைவரை கோவில்”. பண்டைய காலத்தில் மரம், உலோகத்தால் இந்த குடைவரை கோவில் உருவாகப்பட்டது.
இந்த குடைவரை கோவில் உருவாக்கப் பட்டதால் முகமண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை என்ற அமைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது.
முகமண்டபத்தில் 2முழு தூண்களும், 2 அரை தூண்களும் இருகின்றன, இந்த தூண்கள் சதுரம் கட்டமைப்பில் இருக்கும். இந்த தூணின் சிறப்பு அம்சமே.., அதன் தூண்களில் தாமரை மலர்கள் செதுக்கப் பட்டிருக்கும்.
தூண்களில் பல உருவங்களும் செதுக்கப் பட்டுள்ளன, அதுமட்டுமின்றி கோயில் கருவறையில் வலதுபுறமும், இடதுபுறமும், தூவார பாலகர்கள் உள்ளனர்.
இந்த கோவில் பிரம்மா விஷ்ணுசிவன் ஆகிய மும் மூர்த்திகளின் கோவில் என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் மும் மூர்த்திகளுக்கும் தனி தனி கருவறைகள் உண்டு.., ஆனால் கருவறையில் தற்போது விக்கிரகத் திருமேனிகள் எதுவும் இல்லாததால், மும் மூர்த்திகளின் திருமேனிகள் மரத்தில் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும்.
அவை காலபோக்கில் அழிந்து இருக்க கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரி அஜய்குமார் கூறியுள்ளார்.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…
Discussion about this post