வியாழன் கிழமை சாய்பாபா விற்கு விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா…?
சாய்பாபா என்றால் வணங்காதவர்கள் யாரும் இல்லை.., அதிலும் பெண்கள் தான் அதிகம்.
வியாழன் கிழமை அன்று, அவருக்கு அசைவம் சாப்பிடாமல் இருந்து மாலை கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். ஆனால் அதனால் மட்டும் பலன் கிடைக்குமா…? பாபாவின் முழு அருளும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..? இதை முழுதும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
வாரம்தோறும் பாபாவிற்கு அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பது. அல்லது காலை முதல் மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது, அவரவருக்கு ஏற்றது போல இருப்பார்கள்.
ஆனால் காலை முதல் மாலை வரை அசைவம் சாப்பிடாமல் மட்டும் விரதம் இருந்து, மாலை வீட்டிலேயே விளக்கு ஏற்றி தீப ஆராதனை செய்ய வேண்டும்.
பின், பாபாவிற்கு படையல் வைக்கும் விதமாக. எதாவது ஒரு இனிப்பு பலகாரத்தை உங்கள் கைகளால் செய்ய வேண்டும். செய்து அதையும் தீப ஆராதனை செய்யும் நேரத்தில் படைக்க வேண்டும்.
தீப ஆராதனை செய்து முடித்த பின்.., ஒரு பேப்பர் அல்லது காகித நோட்டில் 108 முறை “ஓம் சாய் ராம்” என எழுத வேண்டும்.
இப்படி தொடர்ந்து 9 முறை செய்தால் போதும்.., நீங்கள் நினைத்த காரியம் கட்டாயம் நிறைவேறும். பாபாவின் முழு அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
முக்கியமாக பாபாவிற்கு விரதம் இருக்கும்.., பக்தர்கள் காலை உணவாக. பாபாவிற்கு பிடித்த நொய்க்கஞ்சி செய்து குடிக்கலாம்.
மேலும் இது போன்ற பல தெய்வீக தகவல்களை தெரிந்து கொள்ள.., தொடர்ந்து படித்திடுங்கள்.